பள்ளி தலைமை ஆசிரியரை மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!

புதுச்சேரியில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மற்ற மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 10ம் வகுப்பு கணித ஆசிரியை, அங்கு பயிலும் மாணவர் ஒருவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், தனது தந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, மாணவனின் தந்தை, தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி, பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை திறக்க வேண்டுமென்றும், தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Design a site like this with WordPress.com
Get started