முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் – TRB தலைவர் லதா

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 27,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கென தமிழகத்தில் 154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த தேர்வினை 8 திருநங்கைகள் உள்பட ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளதாகவும், தேர்வுகள் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Design a site like this with WordPress.com
Get started