அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் தனி இடஒதுக்கீடு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 207 இடங்கள் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்*
*இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்* *வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது*
*அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.பி.ராமன் வாதிடும்போது, மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பின் வௌிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் காலி இருந்தால் ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும்*
*அந்த பட்டியலை கல்லூரி உரிய விதிகளின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆனால் அந்த பட்டியலின் அடிப்படையில் நிரப்பப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்*
*தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் வாதிடும்போது, காலி இடங்கள் குறித்த பட்டியல் மட்டுமே சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மெரிட்படிதான் காலி இடங்களை நிரப்ப வேண்டும்*
.
*ஆனால் கல்லூரிகள் எப்படி நிரப்புகின்றன என்று தெரியவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை*
*எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக இந்த நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்*
. * மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வேல்முருகன்* *வாதிடும்போது, காலியாக இருந்த 207 இடங்களும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்றார்*
*அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பள்ளிப்படிப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்கள், மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளை நாடுவது ஏன், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்க கூடாது, காலி இடங்கள் தொடர்பான பட்டியலை அனுப்பினால் மட்டும்போதுமா, எந்த அடிப்படையில் *நிரப்பப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டாமா?*
*இங்கு அரசு மருத்துவர்களுக்கு ஆசிரியர்களைக் காட்டிலும், ஏன் எனது உதவியாளரைக் காட்டிலும் குறைந்த சம்பளமே தரப்படுகிறது. இது மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருதுகிறோம்*
*தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவ கல்லூரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடுகிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இந்த கல்லூரிகள் அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்*
