பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்

வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.

அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது. ஏற்கனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி நாளை மறுநாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்துள்ளது.  

Design a site like this with WordPress.com
Get started