சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றனர்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தபட இருந்தது.
சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு வினாத்தாள் கொடுக்காமல் மதியம் வரை காக்க வைத்ததாக கூறப்படுகிறது.
காலையில் தேர்வு எழுத வந்தவர்களே பிற்பகலில் தான் தேர்வு எழுத தொடங்கியதால் மதியம் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வறைக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த ஏராளமான தேர்வாளர்கள், தேர்வு எழுதாமலையே திரும்பிச் சென்றனர்.
