அடுத்த 2 ஆண்டுகளுக்கு அனுமதி இல்லை

அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை – ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி அறிவிப்பு * பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் முடிவு. * சென்னையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கிற்கு பின்னர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு தேர்வுதுறை புதிய உத்தரவு

11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு * அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் சுற்றறிக்கை * அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் ஆண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

ஆசிரியர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்

அரசு ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின விழாவில் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. அங்கு நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி 19 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அவர் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்த விஞ்ஞானContinueContinue reading “ஆசிரியர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்”

ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குறுவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை மேற்கொள்ளுதல் – புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்- அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

CLICK HERE DOWNLOAD PDF

பள்ளிக் கல்வி 2019-2020 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவம் சமர்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் – குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வி 2019-2020 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவம் சமர்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் – குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள்.

RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம். தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது. ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல்ContinueContinue reading “காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள்.”

கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App

கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android App. தற்போது சோதனை வடிவில் மட்டுமே. கீழே இருக்கும் link-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியிலேயே கல்வி தொலைக்காட்சியை கண்டு மகிழுங்கள். CLICK HERE DOWNLOAD

90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன்

90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க ஆசிரியர்கள் நூதன முயற்சி

மெக்ஸிகோவில் பள்ளித் தேர்வில் காப்பி அடிக்காமல் எழுதுவதற்காக ஆசிரியர்கள் எடுத்த முயற்சி விவாதப் பொருளாகி உள்ளது. லேக்ஸ்கலா ((Tlaxcala)) என்ற இடத்தில் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தேர்வெழுதும் போது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தடாலடியாக முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் அட்டைப் பெட்டியால் மூடியிருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாங்காக்கில் இதேபோன்று தேர்வில்ContinueContinue reading “தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க ஆசிரியர்கள் நூதன முயற்சி”

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் இதனிடையே ஆசிரியர் தினத்தை முன்னிட்டுContinueContinue reading “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)”

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் ேதர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மேற்கண்ட வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி சிபிஎஸ்இ ஒதுக்கும் தேதி மற்றும் நேரங்களில் அந்தந்த பள்ளிகள் பொருத்தமான நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அல்லது அகமதிப்பீட்டுக்கான செய்முறைகளையும் நடத்திContinueContinue reading “10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு”

பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவு

பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது .ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, தேர்தல் நடைமுறை விளக்க புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: பள்ளிகள் தோறும், ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தேர்தல் கல்வியறிவு குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம்,ContinueContinue reading “பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவு”

Jio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் Jio GigaFiber திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. Jio GigaFiber திட்டத்துடன் ஒரு டெலிஃபோன் சேவை, ஒரு கேமிங் செட் டாப் பாக்ஸ், ஒரு இலவச 4 கே டிவி மற்றும் ஜியோ இண்டர் நெட் அஃப் திங்க்ஸ் (IoT – Internet of Things) என்று சொல்லப்படும் சேவை வழங்கப்பட இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று நம் முகேஷ் அம்பானி 42-வது ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவித்தContinueContinue reading “Jio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?”

எமிஸ் இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது?

இதில் 4 நிலைகள் உள்ளன. நிலை 1 : School Menu வில் உள்ள Timetable க்கு சென்று, அதில் Term Time table ஐ Click செய்யவும். இதில் Select Term என்பதில் Term 1 என்பதை Click செய்யவும். Select Class என்பதில் முதல் வகுப்பையும், Select Section என்பதில் உரிய பிரிவையும் (உதாரணம் பிரிவு A) தேர்வு செய்து Submit தரவும். பிறகு திங்கள் முதல் சனி வரை, மேலே தேர்வு செய்தContinueContinue reading “எமிஸ் இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது?”

10th-காலாண்டு தேர்வு  மாதிரி வினாதாள் -2019

10-தமிழ் முதல் தாள் மாதிரி வினா விடை click here 10th-தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினா விடை-CLICK HERE 10th-ENGLISH 1 PAPER MODEL QUESTION PAPER-CLICK HERE 10th-MATHS MODEL QUESTION PAPER-CLICK HERE 10th- SCIENCE MODEL QUESTION PAPER- CLICK HERE 10th-SOCIAL SCIENCE MODEL QUESTION PAPER-CLICK HERE

கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக தனது ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுவதாக அதன் தலைவர் பிரவின் குமார் பர்வார் தெரிவித்துள்ளார். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர் தற்போது இதன் மூலம் 200ContinueContinue reading “கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை”

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை, ஆசிரியர் ஒருவர் கூறியதின் பேரில் மாணவர் கார்த்தீஸ்வரன் ஆன் செய்துள்ளார். அப்போது மின் மோட்டாரில்ContinueContinue reading “அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு”

FLASH NEWSகணினி ஆசிரியருக்கான தேர்வு – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? – ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி * இதுகுறித்து செப்டம்பர் 6-ம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு

ஆய்வின்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்க வேண்டும் என ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் புதிதாகContinueContinue reading “ஆய்வின்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்”

சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு

சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பணிContinueContinue reading “சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு”

பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கும் புதிய பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு உரிய மாதிரி வினாத் தாள்களை கல்வித்துறை இணையதளத்தில்ContinueContinue reading “பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு”

இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்

வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துள்ள ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தொகையாக வோடஃபோன் ஐடியா ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தக் கட்டணத்தை 20 ரூபாய் ஆக வோடஃபோன் நிறுவனம் குறைத்துள்ளது. 20 ரூபாய் ரீசார்ஜ் என்பது 28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் உள்ளது.ContinueContinue reading “இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்”

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை

வரும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களில் யாரேனும் உரிய தகுதிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தால், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பரிந்துரை செய்த முதன்மைக்கல்வி அலுவலர் ( CEO ) மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தங்கள் மாவட்டம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான இயக்குநரின்ContinueContinue reading “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை”

Design a site like this with WordPress.com
Get started