ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற செய்யவேண்டியவை:அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர் என்றும்ContinueContinue reading “ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற செய்யவேண்டியவை:அமைச்சர் செங்கோட்டையன்”

2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை

மாணவர்கள்ஒரு நல்ல ஆசான் நினைத்தால் களிமண்ணையும் உயிரூட்டமுள்ள அழகிய பொக்கிஷமாக வடிக்க முடியும். இவர்களை கவுரவிக்கும் விதமாக, தமிழக அளவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆண்டுதோறும் வழங்குகிறது. இந்தாண்டு, திருப்பூரில் இருந்து விருது வாங்கியவர்களில், பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா,முக்கியமானவர். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் செய்த சாதனை மகத்தானது.அதை அவரிடமே கேட்போம்…கடந்த, 1997ல் பெருமாநல்லுார் அருகே தொரவலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர் பணியில்ContinueContinue reading “2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை”

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களால், நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என கவலை தெரிவித்தார். ஆதலால் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செங்கோட்டையன்ContinueContinue reading “90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்”

தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தை பாருங்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவில் நலத்திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளார். கோழியாலம் அரசு ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் விக்னேஷ்வரன் என்பவருக்கு ஞாயிற்றுக்கிழமை காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விக்னேஷ்வரனுக்குத் தோன்றியுள்ளது. இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக்கானContinueContinue reading “தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தை பாருங்கள்..”

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு

சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.விழிப்புணர்வு பேரணி: திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.’ தூய்மை பாரதம்’ திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ மாணவியர், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில், பேரணி செல்லும்போது, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த, பள்ளியின்,ContinueContinue reading “சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு”

பள்ளி வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்ய வேண்டும்: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் ஆசிரியர் பயிற்றுநர்களின் வரையறுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் பல்வேறு விதிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் ஆசிரியர்களின் பணிகள் தொடர்பாக கூறியிருப்பதாவது:*இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன்படி பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளை பள்ளி வரைபட பயிற்சி மற்றும் புவியியல் தகவல் முறைமை மூலம் கண்டறிய வேண்டும். இதில் தேவையின் அடிப்படையில் புதிய தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம்ContinueContinue reading “பள்ளி வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்ய வேண்டும்: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உத்தரவு”

சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை – உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை

சி.பி.எஸ்.இ., 6ஆம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்வில் சரியான விடையை தேர்வு செய் என்ற பகுதியில், இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில், தலித்துகள் யார்” என்கிற கேள்விக்கு, தீண்டத்தகாதவர்” என்ற பதிலும், இஸ்லாமியர்களின் வழக்கமான குணம்” என்ன ?என்பதற்கு, பெண் பிள்ளைகளை, பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்” என்ற பதிலும் தரப்பட்டுள்ளது. இந்த இரு கேள்விகள் மற்றும் பதில்கள், சர்ச்சையைContinueContinue reading “சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை – உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை”

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ம் கல்வி ஆண்டில் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர். அப்போதுContinueContinue reading “பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”

30ம் தேதிக்குள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெற்று வழங்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது .மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு திட்டத்தில் கடந்த 2019-20ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்ற மாணவ மாணவியரிடம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றுதல் தொடர்பான ஆய்வு கூட்டம், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தி–்ல 2019-20ம் கல்வியாண்டில் 9ம்ContinueContinue reading “30ம் தேதிக்குள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெற்று வழங்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்”

19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை:அமைச்சர் செங்கோட்டையன்

நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று துவங்கியது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:ஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல்ContinueContinue reading “19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை:அமைச்சர் செங்கோட்டையன்”

அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு: EMIS NEW UPDATE

EMIS UPDATED NEWS: Teacher Profile Part – III புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது – இதை எவ்வாறு பூர்த்தி செய்வது? எமிஸ் இணையத்தில் ஆசிரியர் பகுதியில் புதிதாக பகுதி மூன்று இணைக்கப்பட்டுள்ளது.அதில் ஆசிரியர்களது கல்வித்தகுதி மற்றும் ஆசிரியர்கள் எடுத்துள்ள கூடுதல் பணி விவர நாட்கள் ( OD ) பூர்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் 210 என முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் 210 என தொடக்கக் கல்வி இயக்குநர், முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளார்

அரசு நிர்வாகங்களில் பணிபுரிய ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பல்வேறு அமைச்சகங்கள், அரசு நிர்வாகங்களில் பணிபுரிய, ‘ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ வயது 30-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2019, செப்., 12 விபரங்களுக்கு: click here

5 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள்

கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மதுரை – 79 madurai Apply click here காஞ்சிபுரம் – 238 kanchipuram apply here , ராமநாதபுரம் – 79 Ramanathapuram apply here , திருப்பூர் – 68 , Thirpur apply here கடலுார் – 59, cuddalore apply here

புதிய ‘பாஸ்வேர்டு செக்-அப்

இந்த டிஜிட்டல் உலகில் நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாஸ்வேர்டு. காரணம், பாஸ்வேர்டை யாராவது திருடிவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த அந்தரங்க வாழ்க்கையும் பேங்க் பேலன்ஸும் வெளியே கசிந்து விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். ஆம்; மெடிக்கல் செக்-அப்பைப் போல ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.இதை சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். முதலில் குரோம் வெப் ஸ்டோருக்குள் சென்று ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை குரோம் பிரவுசருடன் இணைக்கContinueContinue reading “புதிய ‘பாஸ்வேர்டு செக்-அப்”

பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: அக்.,2ல் விருது!

பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: இதில் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கு அக்.,2ல் மகாத்மா காந்தி பிறந்த நாளில் விருது வழங்கப்படவுள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் &’துாய்மை நிகழ்வுகள்&’ என்ற பெயரில் செப்.,1 முதல் 16 வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறை, கழிவறைகளை சுத்தம் செய்தல், சுகாதார விழிப்புணர்வு குறித்து உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். செப்.,6 முதல் மரக்கன்று நடுதல்ContinueContinue reading “பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: அக்.,2ல் விருது!”

ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை

ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். பஞ்சாபை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் நிரந்தர ஊழியர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வெவ்வேறாக உள்ளது. மேலும் எங்களுக்குContinueContinue reading “ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை”

குடையுடன் பாடம் கற்கும் குழந்தைகள்: மழையினால் கூரை ஒழுகும் பள்ளிகளின் அவலம்

கோரபந்தா (ஜார்க்கண்ட்) ஜார்க்கண்ட் மாநிலத்தில் மழையினால் ஒழுகும் பள்ளிக் கூரைகளைக் கூட மாற்றாமல் வகுப்பறையில் குடையுடன் பாடம் கேட்கும் அவலத்திற்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். சாந்தால் பழங்குடியினர் அதிகம் வசித்துவரும் இயற்கை எழில்மிக்க மலைகள் சூழ்ந்த ஒரு மாநிலம் ஜார்க்கண்ட். ராஞ்சியை தலைநகராகக்கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது. ஏழைக்குழந்தைகள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையே அரிதாக உள்ள நிலையில் பள்ளிக் கட்டமைப்புகள் போதிய வசதியின்றி காணப்படுகின்றன. கோரபந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முரேதாகுரா கிராமத்தின்ContinueContinue reading “குடையுடன் பாடம் கற்கும் குழந்தைகள்: மழையினால் கூரை ஒழுகும் பள்ளிகளின் அவலம்”

டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்

டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில்; பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு

குறிப்பு:- 5,6,7,8 வகுப்புகளுக்கு உடற்கல்வி(சுற்றுசூழல்)வினாத்தாள்களை வகுப்பு ஆசிரியர்களே தயாரித்து நடத்த வேண்டும்

NMMS – தேர்ச்சி பெற்ற மாணவர்களது விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

பள்ளிக் கல்வி – திட்ட ஆண்டு 2019 – 20 மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் – தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாறுதல் வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற இன்றைய விசாரணையின் முழுமையான தகவல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியங்களுக்கு உபரி பணியிட மாறுதல் 30. 8.2019 அன்று கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது. இந்த உபரி பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் உபரி பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உபரி பணியிட மாறுதல் ஆணை செயல்படுத்தப்படவில்லை. அதே பள்ளியில் தொடர்ந்துContinueContinue reading “உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாறுதல் வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற இன்றைய விசாரணையின் முழுமையான தகவல்”

பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை கே.புதூரில் பள்ளி வகுப்பறையிலேயே 11 ம் வகுப்பு மாணவி காலை 8 முப்பது மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போலீசாருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 16 வயது மகள் அர்ச்சனா அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என்றுContinueContinue reading “பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை”

பள்ளிகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோமீட்டர் நீளத்துக்கு 144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்ContinueContinue reading “பள்ளிகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை”

Design a site like this with WordPress.com
Get started