*♦♦மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிமுகப்படுத்திய, ‘தீக்ஷா செயலி’க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது*
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK
*♦♦புதிய பாடத்திட்டத்தின் கீழ், ‘க்யூ.ஆர்.,’ கோடு (Quick Response Code) மூலமாக கற்பிக்கும் முறை நடப்பாண்டு அறிமுகமாகியுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோரும் பாடத்திட்ட கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்*
*♦♦இதற்கு வசதியாக மத்திய அரசு, ‘தீக்ஷா’ ( DIKSHA APP) எனும் மொபைல் செயலியை வடிவமைத்துள்ளது. இதில் சி.பி.எஸ்.இ., முதல் அனைத்து மாநில பாடதிட்டங்கள், வகுப்பு மற்றும் பாட வாரியாக பாடநூல்கள், பயிற்சி தேர்வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட்டல் வீடியோ முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன*
*♦♦ஆசிரியர்கள் வழக்கமான முறையில் பாடம் நடத்தியதும், அப்பாடத்தில் உள்ள, ‘க்யூ.ஆர்.,’ கோட்டை மொபைல் அல்லது, ‘டேப்’ எனும் கையடக்க கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், அப்பாடம் தொடர்பான பாடல், வீடியோக்கள் திரைக்கு வரும்*
*♦♦இதனை மாணவருக்கு காண்பித்து எளிமையாக பாடம் நடத்தலாம். மாணவர்களும் வீட்டிலே மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்பெற முடியும்*
*♦♦இச்செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறையின், ‘தீக்ஷா’ திட்ட குழு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.இதன்படி, நடப்பு கல்வியாண்டு (2019-20) துவங்கிய மூன்று மாதங்களில், தமிழகத்தில் மட்டும், 50 லட்சத்திற்கு மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2 கோடி முறை, ‘க்யூ.ஆர்.,’ ஸ்கேன் செய்து பயன்பெற்றுள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக, கல்வித்துறையினர் கூறினர்*
