இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதில் முதல் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் முதல் 3 ஆண்டுகளில் தோல்வி என்பது யாருக்கும் ஏற்படாது.
1 முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள தேர்வுகளில் அடுத்த 3 ஆண்டுகளில் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். அதனால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ தேர்வு முறையை ரத்து செய்வது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
