கர்நாடகாவில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், இந்த கல்வியாண்டு முதலே 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்று கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பதை உறுதி படுத்திக்கொள்ளவும் எதையும் கற்றுக்கொள்ளாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகவும் இந்த முறையை அறிமுகம் செய்வதாக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை தீவிரமாக கருத்தில் கொள்ள பொதுத்தேர்வு வகை செய்யும் என்று பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையால் கர்நாடகாவில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு முன்னேற தடை இல்லை என்ற விதி கைவிடப்படுகிறது
