அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம்
செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் வினீத் ஜோசி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் வினீத் ஜோசி கூறியுள்ளார்.
மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மாணவர்களின் கைரேகை மற்றும் கருவிழி படலத்தின் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சேகரிக்கப்படும் இந்த இரு தரவுகளும், விண்ணப்பம், தேர்வு, கலந்தாய்வு, அனுமதி ஆகிய பல்வேறு நடைமுறைகளில் சரிபார்க்கப்படும் என்று வினீத் ஜோசி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் இரு முறை கைரேகை பெறப்படுவதாகவும் ஆனால் அவை காகிதத்தில் மட்டுமே பெறப்படுவதாகவும், டிஜிட்டல் பதிவாக இல்லை எனவும் வினீத் ஜோசி கூறியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மாணவர்களின் தரவுகளை அம்மாநில அரசு கேட்டிருப்பதாகக் கூறியுள்ள வினீத் ஜோசி, இதுபோல் முறைகேடு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாத வண்ணம் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதேவேளையில், மாணவர்களுக்கு கடினமாக இல்லாத வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.
