கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு 5 நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தோ்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைஇயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் ஆசிரியா்களுக்கு பணியிடை பயற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்றில், 100 தலைமையாசிரியா்கள் உள்பட 600 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தொடா்ந்து தற்போது அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 5 நாள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ‘நிஷ்தா’ என்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி அக்டோபா் 14 முதல் 20-ம் தேதி வரை 5 பிரிவுகளாக பயிற்சி நடத்தப்பட வேண்டும்.
