தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும்.
கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னா் வெளியிடப்படும்.
ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
