காலாண்டுத்தேர்வு மதிப்பெண் ஆய்வில் ஆசிரியர்கள் தீவிரம்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காலாண்டு மதிப்பெண்களை, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து மதிப்பீடுகின்றனர்.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை, அதன் அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்கும் வகையில் தற்போது நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலும், 14 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பொறுப்பாக நியமித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஒரு மேல்நிலை அல்லது உயர்நிலைப்பள்ளிக்கு ஒருவர் என்ற வகையில், அந்த பள்ளி தலைமையாசிரியர்களுடன் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் அடிப்படையில், காலாண்டுத்தேர்வு முடிவுகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் உடுமலை கல்வி மாவட்டத்தில் நடந்தது.


துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அவர்களுக்கான அந்தந்த மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் காலாண்டுத்தேர்வு முடிவுகள், மாணவர் எண்ணிக்கை, மதிப்பெண்களை சமர்ப்பித்தனர்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

Design a site like this with WordPress.com
Get started