பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

காளையார்கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் அரசு துவக்கப்பள்ளியில் கழிப்பறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.


இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட இரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகின்றனர். இங்கு ஒன்று முதல் 5 வகுப்பு வரை 54 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியைக்கும், மற்றொரு ஆசிரியைக்கும் ஈகோ பிரச்னையால் தகராறு ஏற்படுகிறது. தலைமை ஆசிரியை அடிக்கடி விடுப்பில் சென்று விடுகிறார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

பள்ளி மற்றும் ஆசிரியைகளுக்கான கழிப்பறையை சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதை தவிர்க்கும் மாணவர்களை பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டுகின்றனர்.


மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் தலைமை ஆசிரியை காளையார்கோவில் போலீசில் மற்றொரு ஆசிரியை தன்னை தாக்கியதாக புகார் செய்துள்ளார்.

Design a site like this with WordPress.com
Get started