மத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்

மத்திய அரசின் உயர் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர்ஜோதி வெங்கடேஷ்வரன் வெளியிட்ட செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

2019 மார்ச் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களும், ஏற்கெனவே 2015, 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகை பெற்று வருபவர்களிடமிருந்து புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களும் வர வேற்கப்பட்டுள்ளன.

இதற்கு http://www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started