நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமா ஆகியோர் டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டனர்.

நெதர்லாந்து அரசர் வில்லியம் அலேக்சாண்டர் அவரது மனைவி அரசி மேக்சிமா ஆகியோர் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு 14-ம் தேதி வந்தனர்.
இந்நிலையில், அரச தம்பதியினர், டெல்லியில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் ராகேஷ் செம்மல்டி கூறுகையில், “பாலின சமத்துவம், சுகாதாரம், பருவநிலை மாற்றம், தரமான கல்வி உட்பட 12 குறிக்கோள்கள் எங்கள் பள்ளியின் பாடத்திட்டத்தில் உள்ளன. இதை அரச தம்பதியினருக்கு எடுத்துக் கூறினோம். அவர்களை வரவேற்பதில் மாணவர்கள் மிகவும்மகிழ்ச்சியடைந்தனர். மேலும், பள்ளிகுறித்தும் பாடத்திட்டம் குறித்தும் தம்பதிக்கு விளக்கமளித்தனர். எங்கள் பள்ளியில் உள்ள ‘செல் சிறுமியே செல்’ என்ற திட்டம் குறித்தும் கேட்டறிந்தனர்” என்றார்.
5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த நெர்லாந்து அரசதம்பதியினர், இன்று (வியாழக்கிழமை) கேரளாவுக்கு செல்லவுள்ளனர். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை (வெள்ளிக்கிழமை) தாயகம் திரும்பிச் செல்கின்றனர்.
