பள்ளிகல்வித் துறையின் இலவச உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், உயர்கல்வி, உளவியல் ஆலோசனைகள், அரசு சார்ந்த திட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் 14417 என்ற இலவச எண் தொடர்பு கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் 14417 என்ற எண்ணிற்கு வரும் அழைப்புகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 14417 எண்ணிற்கு வரும் புகார்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இஎம்ஐஎஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் இணையதளம் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
