ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆசிரியை தாக்கியதில் 24 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த கூகலூரில் அரசு உதவி பெறும் காந்தி கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-ஆம் வகுப்பு கணித ஆசிரியையாக பணியாற்றுபவர் சிவகாமி. இவர் தான் நடத்திய வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறி 28 மாணவிகளை பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த வகுப்புக்கு வந்த மற்றொரு ஆசிரியை கை மற்றும் கால்களில் அடிபட்ட தழும்பு மற்றும் வீக்கத்துடன் அழுது கொண்டிருந்த மாணவ மாணவிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகளுக்கு கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியை சிவகாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
