தொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்

பதி கிருபாகரன், ”பள்ளிக் குழந்தைகளை தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் பழமையான இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு முதல்வர் ஆவன செய்யவேண்டும்.

நாம் நயாகராவையும் வாஷிங்டனையும் தெரிந்து கொண்டால் என்ன? முதலில் நம் வீட்டையும் நாட்டையும் தெரிந்துகொள்ளட்டும். இதன்மூலம் தமிழ்க் குழந்தைகள், தமிழகத்தில் வசிப்பவர்கள் நமது தொன்மையை அறிந்துகொள்ள முடியும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, ”தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையில், எப்படியெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை பள்ளிக் குழந்தைகள் பார்வையிட வேண்டும். இதற்காக அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல, அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்” என்று தெரிவித்தார்.

Design a site like this with WordPress.com
Get started