தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் -தேர்தல் ஆணையம் புதிய தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, 4 வாரம் கால அவகாசம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click here join TELEGRAM GROUP LINK

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதுதொடர்பான வழக்கில், இன்று ஆஜரான மாநில தேர்தல் ஆணையம் தரப்பு, தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.

 ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு,வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு, வாக்கு இயந்திரங்களை அனுப்புவது குறித்து, தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கவில்லை

என்று, மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளதால், டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணை வெளியிட அனுமதி அளிக்குமாறு, மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், டிசம்பர் மாதத்திற்கு தள்ளிபோகிறது.

Design a site like this with WordPress.com
Get started