பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 25 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: பொறியாளர் – 19 
சம்பளம்: மாதம் ரூ.23,000

பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி – 06 
வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ராணிக்ஸ் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.in  அல்லது http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Website-Advertisement-EWandA-SBU-22-10-19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:02.11.2019

மேலாண்மை தொழில்துறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2019

Design a site like this with WordPress.com
Get started