உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மதுரையில் பாடவேளை ஒதுக்கீடு நிர்ணயம் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் ‘சர்பிளஸ்’ (உபரி) எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Click here join TELEGRAM GROUP LINK

பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பாடவேளை ஒதுக்கீடு மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் தொடர்பாக ஆய்வு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.

அரசு உத்தரவுப்படி தற்போது ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு வாரம் 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். கிராம பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார்.அதற்கேற்ப பாடவேளைகள் உள்ளன.

தற்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள இரு வகுப்பு பிரிவுகளையும் ஒரே வகுப்பாக்கி பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களின் பாடவேளையும் குறையும். அதை ஈடுகட்ட அவர்களுக்கு கீழ் நிலையில் உள்ள 9,10ம் வகுப்பிற்கு பாடம் நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வகுப்புகளின் பட்டதாரி ஆசிரியர்கள் 350 பேர் வரை உபரியாக (சர்பிளஸ்) உள்ளனர்.

முதுநிலை ஆசிரியர்களின் வருகையால் உபரி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் “பாடவேளை, பணிநிர்ணயம் குறித்து தகவல் சேகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

Design a site like this with WordPress.com
Get started