அரசு பள்ளிகளில், ‘எமிஸ்’இணையதள பதிவேற்றம்உள்ளிட்ட பணிஅதிகரிப்பதால்,கற்பித்தல் பணிபாதிக்கும் நிலைஉருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும்மேற்பட்ட, தொடக்க,நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்டஉயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன.
Click here join TELEGRAM GROUP LINK
அங்கு படிக்கும்மாணவ, மாணவியரின்விபரம், ஆசிரியர் விபரம்உள்ளிட்டவை, ‘எமிஸ்’எனும் கல்விமேலாண்மை தொகுப்புஇணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாணவரின்தொடர் மதிப்பீட்டு விபரம்,உடனுக்குடன் பதிவேற்றஉத்தரவிட்டுள்ளது.இதனால், ஆசிரியர்களின்கற்பித்தல் பணிபாதிக்கப்படுவதாக,குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளிஆசிரியர்கள்கூறியதாவது: கல்விதுறையின் அனைத்துகடித போக்குவரத்தும்,தற்போது இணையதளம்மூலம் நடக்கிறது.
மாணவர்களின் சேர்க்கைவிபரம், நலத்திட்டம்வழங்குவது, வருகைபதிவு உள்ளிட்டவை,ஆன்லைன் முறையில்நடக்கும் நிலையில்,தற்போது தொடர் மதிப்பீடுமதிப்பெண்களையும்,உடனுக்குடன் பதியஉத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ளபணிக்கே, ஒரு ஆசிரியர்,முழு நேர பணியாக,கணினியில் பணிபுரியவேண்டிய நிலை உள்ளது.
மேலும், சுமையைஅதிகரித்தால், கற்பித்தல்பணியை விட்டுவிட்டு,பதிவேற்றம் மட்டுமேசெய்ய வேண்டும்.போதாக்குறைக்கு, எமிஸ்இணையதளம், பல நாள்செயல்படுவதில்லை.இதனால், கற்பித்தல்பணி பாதிக்கப்படுவதைதடுக்க, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்
