பி.எப்.பில் பணம் எடுக்கயு.ஏ.என். எண்ணிற்காக,பணியாற்றும் நிறுவனத்தைஇனிசார்ந்திருக்கதேவையில்லை,இனி நீங்களே உங்கள்யு.ஏ.என். எண்ணைஉருவாக்கி கொள்ளலாம்.

இதற்கான வசதி இ.பி.எப்.ஒ.இணையதளத்தில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.மாதசம்பளம் வாங்கும்பணியாளர்களுக்குதொழிலாளர் வருங்காலவைப்பு நிதியகத்தில்இருந்து இ.பி.எப்.ஒ.இணையதளத்தில் யு.ஏ.என்.எனப்படும் யுனிவர்சல்அக்கவுண்ட் நம்பர்கொடுக்கப்படும். அதில்தொழிலாளரின் பி.எப்., எண்மாறும், அவர் எத்தனைநிறுவனம் மாறினாலும்,அவரது ஓய்வு காலம் வரையு.ஏ.என்.
எண் மாறாது.தற்போது பான் எண் மற்றும்ஆதார் எண், ஆகியவையு.ஏ.என். அக்கவுண்ட்நம்பருடன்இணைக்கப்படுவதால், அந்தநம்பர் தான் அவரது பணிஓய்வு காலம் வரைஇணையதளத்தில்நிரந்தரமாகபராமரிக்கப்படும்.
இந்நிலையில் மத்தியதொழிலாளர் நலஅறக்கட்டளை அமைப்பின்67வது தினம் நடந்தது. இதில்மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார் கலந்து கொண்டார்.அப்போதுஇ.பி.எப்.ஒ.இணையதளத்தில் இரண்டுபுதிய வசதிகளை தொடங்கிவைத்தார்.
அதில் மாதசம்பளம் வாங்கும்தொழிலாளர்கள் இனியு.ஏ.என். எண்ணுக்காகதாங்கள் பணியாற்றும்நிறுவனத்தில்விண்ணபித்து பெறதேவையில்லை.
யு.ஏ.என். எண்ணைதாங்களே உருவாக்கிக்கொள்ளலாம்.
மற்றொன்றாகஓய்வூதியதாரர்கள்ஓய்வூதியம் தொடர்பானஆவணங்களை பெற டிஜிலாக்கரில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.இந்தஇரு வசதிகளும்இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
