Click here join TELEGRAM GROUP LINK
Author Archives: Sha EDUCATE
நாளை முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளதால், வரும் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவருக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த செப்.13- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து செப். 24 முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. பின்னர் அக். 3-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள்திறக்கப்படவுள்ளது.முன்னதாக, காந்தியின் 150- ஆவது பிறந்த தினத்தையொட்டிContinueContinue reading “நாளை முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை”
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை: ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி நிரவல் மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் அ.சங்கர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோராக உள்ளனர். தற்சமயம் பணிநிரவல் என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணி என்ற முறையில் மாதிரிப் பள்ளிகளுக்கும்,ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை: ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு”
ஜாக்டோ ஜியோ-இன்று பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு.
ஜாக்டோ ஜியோ- வை இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு. பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்_ TNGTF _மாநில மையம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு
கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாணவர்களின் கற்றல் முறையை எளிமையாக்கவும் பள்ளியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்கள் கையாண்டு வரும் வித்தியாச முயற்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியின் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, தூய்மையின் அவசியத்தை மாணவர்களுக்கு அவ்வப்போதுContinueContinue reading “கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை”
நான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை
கடந்த நான்கு ஆண்டுகளில் பிடெக், எம்டெக் படிப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவிலுள்ள உயர்கல்வி படிப்புகளுக்கான All India Survey on Higher Education (AISHE) என்ற அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் தொழிற்முறை சார்ந்த பிடெக் மற்றும் எம்டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் பிடெக், எம்டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்ப்பு மிகவும் குறைந்துள்ளது மேலும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில்ContinueContinue reading “நான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை”
பதிவேடுகள் பராமரிப்பிலிருந்து ஆசிரியர்களை முழுவதுமாக விடுவியுங்கள்-
அண்மைக் காலமாகத் தமிழகப் பள்ளிக்கல்வியில் காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு புதிய மாற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருவது அறியத்தக்கது. இணையவழியிலான செயல்முறைகளால் காலவிரயமும் தாள் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் முறையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படுவது சிறப்பு. இதன்மூலம் தாள் பயன்பாட்டுக்காகப் பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவது ஓரளவு தடுக்கப்படும் என்று நம்பலாம். மேலும், இணையவழியில் பதியப்படும் தகவல்கள் அழியாமல் நீண்ட காலம் இருக்கும். தேவைப்படும் நேரங்களில் எங்கிருந்தும் பெறவும் அனுப்பவும் இயலும். இதன்காரணமாகப் பல்வேறுContinueContinue reading “பதிவேடுகள் பராமரிப்பிலிருந்து ஆசிரியர்களை முழுவதுமாக விடுவியுங்கள்-“
புத்தகமின்றி, வகுப்பின்றி உடற்கல்வி பாடத்திற்கு தேர்வு:
சென்னை, புத்தகமும் இல்லாமல், வகுப்பும் எடுக்காமல், உடற்கல்வி பாடத்துக்கு காலாண்டு தேர்வு நடந்துள்ளது. கேள்வித்தாளில் இருந்த பிழைகளால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் உடற்கல்வி தேர்வு நடத்தப்பட்டது. இந்த இரண்டு பாடங்களுக்கும், மாணவர்களுக்கு இதுவரை, புத்தகங்கள் வழங்கப்படவில்லை; வகுப்புகளும் நடத்தப்படவில்லை. ஆனால், வினாத்தாளுடன் தேர்வு நடந்தது. ‘தேர்வில், உங்களுக்கு தெரிந்த எதையாவது எழுதுங்கள்’ContinueContinue reading “புத்தகமின்றி, வகுப்பின்றி உடற்கல்வி பாடத்திற்கு தேர்வு:”
12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 7 சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
சென்னை தாம்பரம் அருகே நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களே, மாணவர்களை தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபடச்செய்ததாகவும், தட்டிக்கேட்ட மாணவியிடம் ஆபாசமாக பேசியும், ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 7 சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மாணவியின் தாய் ஒருவர், இந்த பள்ளியில் நடக்கும் அவலங்கள்ContinueContinue reading “12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 7 சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு “
தேர்வு மையங்களை அதிகரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை
ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வு எழுதுபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 1 புள்ளி 85 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த செப்.17-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.ContinueContinue reading “தேர்வு மையங்களை அதிகரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை”
அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க! கூகுலின் புதிய அப்டேட் !
கூகுள் க்ரோமில் உள்ள டேப்களை பயனாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு வேலைப் பார்க்கும் புதிய முறையை கண்டுப்பிடித்து அசத்தியுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் க்ரோமை கூகுல் நிறுவனம் புதுப்பித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு, விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான கூகுள் க்ரோம் 77 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது கூகுள். எளிமையான முறையில் கூகுள் டேப்ஸை நாம் அமைத்துக் கொள்ள இந்த அப்டேட் உதவும். கூகுள் டேப்ஸ்களை நமக்கு ஏற்றார் போல் கிளிக் மற்றும் டிராக் செய்துContinueContinue reading “அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க! கூகுலின் புதிய அப்டேட் !”
19,427 தற்காலிக பதவிகளை பள்ளி கல்வித் துறையில் முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு
பள்ளி கல்வித் துறையில் 19,427 கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத தற்காலிக பதவிகளை முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளி கல்வித் துறை, பள்ளி கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகங்களிலிருந்து கருத்துகளைப் பெற்றது. அதன்மூலம், தற்காலிக பணியாளரின் சேவையை நீட்டிக்க ஒவ்வொரு ஆண்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகையில், வழிகாட்டுதல்கள் காரணமாக சம்பளத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேவைகள் அடிப்படையில் பதிவுகள்ContinueContinue reading “19,427 தற்காலிக பதவிகளை பள்ளி கல்வித் துறையில் முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு “
புதிய சம்பள பட்டியல் விவகாரம்: அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள புதிய சம்பள பட்டியல் பிரச்னை தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். Click here join telegram group link இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற ஊழியர்கள், கருவூல ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு வெளியிட்ட புதிய சம்பளContinueContinue reading “புதிய சம்பள பட்டியல் விவகாரம்: அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்”
பணிநிரந்தரம் வேண்டி முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு:-
கருணை மனு குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2012 ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு 16 ஆயிரத்துது 549 பகுதிநேர ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிந்துவந்த 19 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களின்ContinueContinue reading “பணிநிரந்தரம் வேண்டி முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு:-“
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் ஆணைக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் பணிபுரிந்த பள்ளியிலேயே பணியேற்க அனுமதி!
திருவிடைமருதூர் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட கீழ்கண்ட ஆசிரியர்களுக்கு 01.08.2018 மாணவர் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பார்வை 2ல் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 16.09.2019ல் தடையாணை பெற்று மீளவும் அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து கீழ்காணும் ஆசிரியர்கள் 18.09.2019 முற்பகல் முதல் மீளவும் அதே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்கப்படுகிறது.
இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் – புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம்நாள் : 03.09.2019
SENIOR JUNIOR – Rectification Of Pay Anomaly To Government Servants – New Instructions – Chief Secretary Letter Click here Rectification of pay anomaly Forms pdf
தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: உயர் கல்வித் துறை அமைச்சர்
மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தால் வரும் கல்வியாண்டில் தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சீனா, ஜப்பான் நாடுகளைப் போல பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளை தாய் மொழியில் நன்கு புரிந்து படிக்க வசதியாக, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு அறிவித்தபடி, 2011-ஆம் ஆண்டு முதல் தமிழ் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. பொறியியல் இயந்திரவியல் பிரிவில் 719 இடங்களும், கட்டுமானப் பொறியியல்ContinueContinue reading “தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: உயர் கல்வித் துறை அமைச்சர்”
ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு
ஏ..டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன்,ContinueContinue reading “ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு”
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 154 தேர்வு மையங்களில் நடக்கும் என்றும் 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1க்கான தேர்வு வரும் 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும் தேர்வில்ContinueContinue reading “முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி”
சென்னை, CEO,வுக்கு பதவி உயர்வு
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையின், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராஜேந்திரன், பள்ளி கல்வித் துறையின், இணை இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், பள்ளி கல்வி இயக்குனரகத்தின், மேல்நிலைப் பள்ளி பிரிவை கவனிப்பார் என, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பதவி உயர்வால் காலியாகும், சென்னை முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்விContinueContinue reading “சென்னை, CEO,வுக்கு பதவி உயர்வு”
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை தொடங்கும். தனியார் பள்ளிகளை பொருத்தவரை, மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் தொடர்ந்துContinueContinue reading “பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை”
PG TRB PRESS NEWS: Dt – 20/09/19
CLICK HERE JOIN TELEGRAM GROUP
இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் அரசு முதன்மை செயலர் செய்முறை
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு ராஜேந்திரன் அவர்கள் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
FLASH NEWS 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி – அமைச்சர் புதிய அறிவிப்பு
2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்றContinueContinue reading “FLASH NEWS 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி – அமைச்சர் புதிய அறிவிப்பு”
PGTRB 2019 – தேர்வு மையங்கள் தூரம் தவிப்பில் தேர்வர்கள்!
அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால்ContinueContinue reading “PGTRB 2019 – தேர்வு மையங்கள் தூரம் தவிப்பில் தேர்வர்கள்!”
CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்திய பள்ளிகள் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர்ContinueContinue reading “CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு”
2 days workshop on creating Interactive content
Click here SCERT PROC
அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu
மிகவும் நன்றி தி இந்து நாளிதழில் வெளியான நடுநிலையான செய்திக்காக!!*விளக்கமான உரை*அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும்,ContinueContinue reading “அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu”
கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
கனவு ஆசிரியர்’ விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. பள்ளியில் கணினியை பயன்படுத்தி பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி செயல்பாடுகளில் சிறந்த, மாணவர் சேர்க்கைக்கு உதவும் ஆசிரியர், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, ‘கனவு ஆசிரியர்’ விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் கல்விContinueContinue reading “கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு”
