தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்

தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை செய்திருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (செப்.19) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன எந்த விதமான போக்குவரத்துContinueContinue reading “தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்”

FLASH NEWS-பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மாற்றம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை *முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் *தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி ஒரேவிதமான விதிமுறைகளின்கீழ் கொண்டு வருவதற்காக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம்’2018 ஜூலை 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.ContinueContinue reading “மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!”

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கான நேர்காணலை பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்ததாகக் கூறியிருந்தார். அவர்களுக்கு வரும் 23ம் தேதி நேர்காணல் நடக்க இருந்தாகக் குறிப்பிட்ட அவர், 7 பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் குழு முன்பாக இந்த நேர்காணல் நடத்தப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வெளிப்படைத் தன்மைக்காகவே நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ContinueContinue reading “மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்”

EMIS COMMON POOL பள்ளி அளவிலான பணிகள்!!CEO PROCEEDINGS

1.EMIS பணிக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள COMMON POOL மாணவர்களின் பெயர் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். 2.COMMON POOL இல் உள்ள மாணவனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து EMIS இல் பதிவு செய்ய வேண்டும். 3.பதிவை செய்து முடித்த பட்டியலை , தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் CRC மைய BRTE இடம் ஒப்படைக்க வேண்டும். 4.BRTE க்கள் அதை மறு ஆய்வு செய்து வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள்படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும்.ContinueContinue reading “வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு”

தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

💥🤝தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥தமிழகம் முழுவதும் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது 💥💥இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥ஏற்கனவே இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில அறிவிப்பு வெளியாகியுள்ளது 💥💥நர்சரி, பிரைமரிContinueContinue reading தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில், மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம், 2020 – 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின்ContinueContinue reading “பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு”

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்

5,, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, அவர் கண்ணீர் விட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியம், அரசவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியையாக மகாலட்சுமி(40) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.ContinueContinue reading “5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்”

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் – தமிழக அரசு!! மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!! Click here GO

🅱REAKING NEWS :- G.O.NO.166 – 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. Click Here GO 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான்: தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் பேட்டி

ள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் குறித்து எனக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் வந்தது. தேனி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர். ராஜேந்திரன் அந்தப் புகாரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு, கல்லூரியில்ContinueContinue reading “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான்: தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் பேட்டி”

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளையும் அது அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த உள்ளது.இந்தப் புதிய முடிவின்படி, 33 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு அல்லது 60 வயதை அடைந்தவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். இது ஏற்கனவே 7ஆவது ஊதியக் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.இம்முடிவு பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. புதிய முடிவின்படி, 22 வயதில் பணியில் சேரும் அவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுContinueContinue reading “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது!”

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை: அரசு தேர்வுகள் இயக்குநர்

தேர்வு வினாத்தாள்களை லீக் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஷேர்ContinueContinue reading “அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை: அரசு தேர்வுகள் இயக்குநர்”

பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு

தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற நடைமுறை காலநேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்குப் பொருந்தாது என தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பள்ளிகள், முக்கிய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. துறைச் செயலாளர்கள் கூட்டம்: அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமைச்ContinueContinue reading “பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு”

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். Click here join telegram group link ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட`உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 558 பயனாளிகளுக்கு 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.ContinueContinue reading “தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!”

950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி; அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்

உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.  இதனால் ஆசிரியர் பணியிடமும் காலியாகும். தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 720 தொடக்க, நடுநிலை பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளோடு இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு தலைமை ஆசிரியரின் கீழ் குறைந்தபட்சம் 15 பள்ளிகள் இணைக்கப்படும். தலைமை ஆசிரியர் &’பள்ளி முதல்வர்&’ என அழைக்கப்படுவர் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது .தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் பள்ளிகளை ஆய்வுContinueContinue reading “950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி; அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்”

பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 3-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்தியால் குத்திய புகாரில் ஆசிரியர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்

FLASH NEWS-அரசாணை எண் -165-நாள்-17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்

Click HERE

சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான தையல் மற்றும் இசைப்பிரிவு ஆசிரியர்கள் நியமனத்திற்கான முதல் பட்டியலில் இடம் பிடித்த 14 பேரின் பெயர், இரண்டாவது பட்டியலில் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், 6 பேர் புதிதாகContinueContinue reading “சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி”

அரசு -நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2018 பணிமாறுதல் பெற்று-பணியில் சேர்ந்த உரிமைவிடல் செய்தவர்கள் விவரம் கோரும் சார்பு

Join telegram group link

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம்

பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகாரில் கங்கை நதியில் கடந்த சில நாள்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் கதிகார் எனுமிடத்தில் கங்கை நதியின் வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கரையோரம் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அடித்து செல்லப்பட்டது. அந்த விடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்ContinueContinue reading “வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம்”

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விதிவிலக்கு

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டிலுள்ள பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பதுContinueContinue reading “5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விதிவிலக்கு”

Design a site like this with WordPress.com
Get started