அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்

அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்த, பொது சுகாதார இயக்குனர், குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்புக்குள்ளாகி, பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி, கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான்ContinueContinue reading “அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்”

இந்த மாதம் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை., வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!!.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஞாயிற்று கிழமைகள் மற்றும் மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதம் சுதந்திர தினம், பக்ரீத், கிருஷ்ன ஜெயந்தி போன்ற பண்டிகைகள் உள்ளதால் கூடுதல் விடுமுறைகள் உள்ளன. இதனால் இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதன்படி, இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமையான ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறையாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத்ContinueContinue reading “இந்த மாதம் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை., வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!!.”

நமது அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நாள்தோறும் அடையும் துயரம்….?

மே மாதம் லீவு முடிந்து, பள்ளி திறக்க..! மாணவனை சேர்க்க நமது ஆசிரியரும், ஆர்வமாய் காத்திருக்க..! Matric பள்ளிகளோ…? முன்னரே மாணவணை அள்ளிச் சென்று விட..! மிச்சமிருந்த மாணவனை, அரசாங்கம் RTE-ல் அனுப்பி விட..! மேற்கண்ட தூண்டிலில் இருந்து சிக்காத ஏழை மாணவனோ..? அரசுப்பள்ளியில் சேர..! சேர்க்கை ஏன் குறைந்ததென்று, அரசு கேட்க..! முதல் நாளே, புத்தகத்தை கொடுத்து விட வேண்டும் என்று அரசு சொல்ல..! வந்திருந்த பாதி புத்தகத்தை கொடுத்து விட..! வராத புத்தகத்திற்கோ Print-OutContinueContinue reading “நமது அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நாள்தோறும் அடையும் துயரம்….?”

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு

தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, தலைமையாசிரியர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் முதல், ‘பயோமெட்ரிக்’ முறையில், ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வர உத்தரவிட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் தாமதமாக வருவது குறித்து, நேற்று முன்தினம், ‘காலைக்கதிர்’ நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘பயோமெட்ரிக்’ContinueContinue reading “பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு”

தலைமையாசிரியர்களே, அலர்ட்! வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு;

ஒரு மாதிரி வகுப்புக்கான அனைத்து அம்சங்களையும் தயார் நிலையில் வைக்குமாறு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஐகோர்ட் உத்தரவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இணை இயக்குனர் தலைமையில் முதன்மை கல்வி அலவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வுContinueContinue reading “தலைமையாசிரியர்களே, அலர்ட்! வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு;”

டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: காய்ச்சலுடன் வரும் மாணவர்களிடம் என்ன விதமான காய்ச்சல் என்று விசாரித்து சிகிச்சை தர தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை உடனே தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.

2,3,4,5,6,7,8 – August 2nd Week Lesson Plans Updated (TM/EM)

Click here Ganga Guide direct downloading 👇👇👇👇👇 Click here lesson 2nd std All Subj ,All Units 3rd Std – New Syllabus – Term 1 – All Subject And All Units Lesson Plan – English Medium 4th Std Lesson Plan – Tamil All units 4th Std Lesson Plan – English All units 5th Std Lesson PlanContinueContinue reading “2,3,4,5,6,7,8 – August 2nd Week Lesson Plans Updated (TM/EM)”

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க தகுதி தேர்வு நடைபெறும் தேதி: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு ஆகஸ்ட் 7 ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை கூறியுள்ளது

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நாள்: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும்.

5 in 1 STD2nd,3rd and 4th- TERM 1 FA(B) and ENGLISH WORD WALL, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி PDf

4th- TERM 1 ENGLISH👇 click here download fa(b) STD 2 FA(B) TEST 1👇 click here download STD 3 FA(B) TEST 1👇 click here download STD 2 & 3 ENGLISH WORD WALL👇 click here download மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி PDf👇 click here download

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: Click Here For Apply

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கை ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://onlineadmission.ignou.ac.in/admission என்ற வலைதளம் மூலமாக சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். அல்லது, 044 – 26618438, 26618039 ஆகிய தொலைபேசிContinueContinue reading “இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: Click Here For Apply”

யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீசஸ் குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில், முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி https://upsc.gov.inContinueContinue reading “யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்”

7ம் தேதி துவங்குது பி.எட்., கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 7ம் தேதி துவங்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் வழியாக நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லுாரியில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரத்திற்கு முன் முடிந்தது. வரும், 7ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். விண்ணப்பதாரர்களின், ‘கட் -ContinueContinue reading “7ம் தேதி துவங்குது பி.எட்., கவுன்சிலிங்”

புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

புதிய பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தவறுகளைக் கண்ட றிந்து சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத் துள்ளன, அதேநேரம் புதிய பாடப் புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளன. அவற்றை உடனே திருத் தம் செய்ய வேண்டுமென கல்வி யாளர்கள், ஆசிரியர்கள் வலியு றுத்தி வருகின்றனர். அந்தவகையில் புதிய பாடத் திட்டத்தில் இதுவரை 21 பிழைகளைContinueContinue reading “புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை”

சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு

சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்’ என, தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்:அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், 15ம் தேதி, சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும் பள்ளி, ஒன்றிய அளவில், மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுContinueContinue reading “சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு”

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் சீர்மிகு வகுப்பறைகள் (‘ஸ்மார்ட் கிளாஸ்’) திட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மூலம் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட இருக்கிறது. இந்த சீர்மிகு வகுப்பறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்புகளில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நந்தன் சுதர்சனம், பல்லவி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சிContinueContinue reading “அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி”

Design a site like this with WordPress.com
Get started