FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்கள் இதனை tnteu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தமிழகத்த்தில் ஆசிரியர் கல்விக்கான பி.எட் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் நேரடியாக TNTEU B.Sc B.Ed முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும். அல்லது பின்வரும்Continue reading "FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!"

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919Continue reading "உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது"

விரைவில் பங்குச் சந்தையில் முதலீடு-PF பணம்

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது! இது தவிர, ஊழியர்கள் ஒரு புதிய வேலையில் சேரும்போது அவர்கள் EPF திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா அல்லது NPS திட்டத்தை தேர்வு செய்கிறார்களா என்பது குறித்து தெரிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் இந்த யோசனை தொடர்பாகContinue reading "விரைவில் பங்குச் சந்தையில் முதலீடு-PF பணம்"

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் – TRB தலைவர் லதா

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 27,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கென தமிழகத்தில் 154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்த தேர்வினை 8 திருநங்கைகள் உள்பட ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளதாகவும், தேர்வுகள் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள்Continue reading "முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் – TRB தலைவர் லதா"

TRB  ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) ஹால்டிக்கெட்டில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் இத்தேர்வு செப். 27 ல் நடக்க உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன் குளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி விண்ணப்பத்தில் விருதுநகர், திருநெல்வேலி, மதுரை என தேர்வு மையங்களை குறிப்பிட்டிருந்தார் ஆனால் அவருக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் விக்னேஷ்வரி என்ற கையெழுத்து உள்ளது. இதேபோல் பலருக்கு அதிக துாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன சரஸ்வதி கூறுகையில்,''ஹால்டிக்கெட்டில் வேறு ஒருவரின்Continue reading "TRB  ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்"

CBSE  மாதிரி வினாத்தாள் வெளியீடு

சி..பி.எஸ்.இ., பள்ளிகளில் பொதுத் தேர்வுக் கான, மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப் பட்டு உள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத் தேர்வில் இடம் பெற உள்ள கேள்விகள் குறித்து, மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற இணையதளத்தில், வினாத்தாள்களை தெரிந்து கொள்ளலாம்*

அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் விளையாட்டு முறை கல்வி

💥💥20 கிராமப்புற பள்ளிகளில் நடந்த முன்னோட்ட ஆய்வில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால், விளையாட்டு முறை கல்வியை, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 💥💥நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் குறித்து, `பிராத்தம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டும் தமிழகத்தின் மதுரை உள்பட நாடு தழுவிய ஆய்வினை மேற்கொண்டது. கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் பல்வேறுContinue reading "அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் விளையாட்டு முறை கல்வி"

பள்ளிகள் திறந்த பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த,Continue reading "பள்ளிகள் திறந்த பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்"

மத்திய அரசு ஊழியர் புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே, அவருடைய குடும்பத்தாருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர் புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழுContinue reading "மத்திய அரசு ஊழியர் புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு"

கனமழையால் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை : அச்சத்துடன் காலாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசுப்பள்ளிக்கட்டிடம் அறை இடிந்து விழுந்ததால், மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சிறுமூர் என்ற கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை காலை காலாண்டு தேர்வு எழுத வந்த மாணவர்கள், கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், தேர்வெழுதினர். பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என, பல முறை கேட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனContinue reading "கனமழையால் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை : அச்சத்துடன் காலாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்"

பணியிடை நீக்கம் – ஆசிரியர் தற்கொலை முயற்சி

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், பள்ளியிலேயே ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், வாசுதேவன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2 மாதமாக பள்ளி நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்த நிலையில், வாசுதேவனுக்கு சஸ்பெண்டு உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து வாசுதேவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே, சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதற்கிடையே, வாசுதேவன் மீது எடுக்கப்பட்டContinue reading "பணியிடை நீக்கம் – ஆசிரியர் தற்கொலை முயற்சி"

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மொழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10 வகுப்பு தமிழ் மொழி தேர்வை எழுதுவதில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மொழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10 வகுப்பு தமிழ் மொழி தேர்வை எழுதுவதில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் ,Continue reading "மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"

பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு, சாலையில் இருக்கும் சகதியில் பாதுகாப்பாய் வர உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மழை நீர் ஒழுகக்கூடிய வகுப்பறைகள், திறந்தவெளிக் கிணறுகள், பள்ளங்கள், பாதிப்படைந்த சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை,Continue reading "பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு"

ஜாக்டோ ஜியோ நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்காட்டையன் மற்றும் மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் ஆகிய இருவரும்*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை   ஒரு வார காலத்திற்குள் ரத்து செய்யப்படும் என்றும் ...* *மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்*... *அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது*..  *அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது...* *மீண்டும் ஜாக்டோContinue reading "ஜாக்டோ ஜியோ நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு"

அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்

அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத் தாள்கள் திருத்தப்படும் என்று அதன் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியபின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய அரசு சீர்மிகு பல்கலைக் கழகமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என சூரப்பா கேட்டுக் கொண்டார். தமது அமெரிக்க பயணத்தின் போது அங்கு உள்ள நிறுவனங்கள்Continue reading "அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்"

காலாண்டு விடுமுறையில் இலவச நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். Join TELEGRAM GROUP link ஆனால் இந்த முறை காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும்Continue reading "காலாண்டு விடுமுறையில் இலவச நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு"

ஆசிரியர் பணி தேர்வர்கள் பயிற்சி பெற டி.ஆர்.பி., ஏற்பாடு

♦💲♦முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத உள்ளவர்கள், ஆன்லைன் வாயிலாக, கணினி பயிற்சி மேற்கொள்ளும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது ♦💲♦தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவியில், 2,144 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ♦💲♦இதற்கான போட்டி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, வரும், 27, 28 மற்றும், 29ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை, 154 மையங்களில், 1.85 லட்சம் பேர் எழுதContinue reading "ஆசிரியர் பணி தேர்வர்கள் பயிற்சி பெற டி.ஆர்.பி., ஏற்பாடு"

மாணவியருக்கு பேரீச்சம் பழம் அரசு பள்ளிகளில் வழங்க உத்தரவு*

*♦♦அரசு பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி பெறும் மாணவியருக்கு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட, சத்தான பொருட்கள் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது* *♦♦பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற வாசகத்துடன், பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன* *♦♦இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்Continue reading "மாணவியருக்கு பேரீச்சம் பழம் அரசு பள்ளிகளில் வழங்க உத்தரவு*"

Design a site like this with WordPress.com
Get started