புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!

வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருதால் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 2019 முதல் 2022 வரையிலானContinue reading "புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!"

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு போன்றவற்றை அணியக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு நிறங்களில் கயிறுகள், ரப்பர் வளையங்கள், உலோகத்தால் ஆன வளையங்கள் அணிந்து வருகின்றனர். இது மாணவர்கள் இடையே சாதி வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்று கடந்த 2018ம் ஆண்டைய பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசுக்குContinue reading "பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்"

டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக்Continue reading "டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்"

சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்

வீரவநல்லூரில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்ச் தெரு, பொத்தை, பாரதிநகர் மற்றும் புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 குடும்பத்திற்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உத்தரவுகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976, வரிசை எண் 9ன்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு நெல்லைContinue reading "சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்"

ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியம் பெறுவதற்கான இணையவழி ஒரு பக்க விண்ணப் பம், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கான தனி இணையவழி மனு பரிசீலனை முகப்பு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 29 லட்சத்து 50 ஆயி ரம் பயனாளிகள் மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக பெறுகின் றனர். தற்போதுள்ள நடைமுறை யில் ஓய்வூதியம் கோரி மனுக் களை சமர்ப்பிக்க மனுதாரர்கள் வட்டாட்சியர், வருவாய் கோட் டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லContinue reading "ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்"

பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு

அக மதிப்பீட்டு மதிப்பெண் விதிகளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடங்களுக்கான கருத்தியல் தேர்வுடன், அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் வருகை பதிவு, கள பயணம், செயல் திட்டம், அக மதிப்பீட்டு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனஇதற்காக, பல்வேறு விதிகள்Continue reading "பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு"

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: General Manager(Investment Promotion) - 01 பணி: Senior Manager (Investment Promotion) - 02 பணி:Continue reading "தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்"

44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய சமுதாயத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பள்ளி மாணவ பருவத்திலேயே அவர்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் நிலவுவதுடன், பள்ளி வளாகங்களிலேயே வன்முறை சம்பவங்கள் மாணவர்களால் அரங்கேற்றப்படுகின்றன. ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை என பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களை சமூக கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும், சட்டத்தை மதித்தும்,Continue reading "44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை"

தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும். மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்,Continue reading "தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி"

குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு

பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் வெளியீடான, 'டி.என்.பி.எஸ்.சி. , குரூப் 4 வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி' புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவரும்(பொறுப்பு), பொதுப்பணித்துறை மூத்த கண்காணிப்பாளருமான ஆ.செல்வம் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: அரசின் 148 துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 6413 பணியிடங்களுக்கான தேர்விற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அந்தளவுக்கு இன்று போட்டி கடுமையாக உள்ளது.Continue reading "குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு"

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர். இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது இது இப்படி இருக்க ….. மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி போராடாத ஆசிரியContinue reading "மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு"

ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்

மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை

அரசுப்பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது. படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்த முடியும். கண்களைப் பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக இது உள்ளது. ஒரு மாணவர் கூட இல்லையென்று அரசுப் பள்ளிகளை மூடுவது ஒருபுறம் இருக்க,Continue reading "மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை"

Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வுContinue reading "Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!"

வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! 

ப‌யனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌ அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ‌ஜ‌னவரி மாதம் அறிவித்திருந்தது. இந்தப்Continue reading "வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! "

ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி

சென்னை துறைமுகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த வாரம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் வட சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்குமே சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பணத்துக்கு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சர்வர் வேலைContinue reading "ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி"

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

விண்வெளி ஆராய்ச்சி குறித்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 12 அரசு பள்ளி மாணவர்களின் ஆய்வு மாதிரிகளை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற தனியார் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இதையடுத்து இதை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்தநிலையில், அந்த அமைப்புContinue reading "அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்"

அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப் பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்தContinue reading "அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்"

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வைContinue reading "பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது"

SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்ற 1,351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும். இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச்Continue reading "SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு"

DSE – 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்!

Design a site like this with WordPress.com
Get started