சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு

சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்:அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், 15ம் தேதி, சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும் பள்ளி, ஒன்றிய அளவில், மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுContinue reading "சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு"

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் சீர்மிகு வகுப்பறைகள் (‘ஸ்மார்ட் கிளாஸ்’) திட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மூலம் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட இருக்கிறது. இந்த சீர்மிகு வகுப்பறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்புகளில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நந்தன் சுதர்சனம், பல்லவி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சிContinue reading "அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி"

30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!

1) தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி நோட்டு தினசரி எழுதி தேதியுடன் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். 2) சொல்வதை எழுதுதல் பயிற்சி அந்தெந்த வகுப்புக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதி திருத்தம் செய்யப்பட வேண்டும். 3) பருவத்தேர்வு மாதங்களில் மொழி படத்திற்கு 1 கட்டுரை யும் மற்ற மாதங்களில் 2 கட்டுரைகளும் எழுத்தப்பட்டு திருத்தம் செய்ய பட வேண்டும். 4) அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும். 5)News readerContinue reading "30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!"

மடிக்கணினிகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை

பள்ளி வேலை நாள்கள் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் ஆடியோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் மண்டித் தெருவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் பொதுக் கூட்டContinue reading "மடிக்கணினிகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை"

செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., ‘அட்மிஷன்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை, ஏப்ரலில் துவங்கும். பெரும்பாலான பள்ளிகளில், மே மாதம், புதிய வகுப்புகள் துவங்கும் என்பதால், அதற்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவர். ஆனாலும், இடமாற்றம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை, பள்ளிகளில் சேர்க்க வசதியாக, ஆகஸ்ட் வரையிலும், மாணவர் சேர்க்கை தொடரும். இந்தContinue reading "செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., ‘அட்மிஷன்"

அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என,Continue reading "அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு"

தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : பட்டியல் அனுப்ப கடிதம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உள்ளதால் தேர்ச்சி சதவீதம் உயர்ந்த பள்ளிகளின் பட்டியலை ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளைContinue reading "தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : பட்டியல் அனுப்ப கடிதம்"

இணை இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையில், மேல்நிலை கல்வி, இணை இயக்குன ராக பணியாற்றிய, ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தொழிற்கல்வி இணை இயக்குனர் சுகன்யாவுக்கு, மேல்நிலை கல்விக்கான, இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்

ஆகஸ்ட் 7 – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சேலம் மாவட்டம் - கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.அதனை ஈடு செய்ய செப் 7-ஆம் தேதி வேலை நாளாகும் - மாவட்ட ஆட்சியர்

ஓய்வுபெரும் நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்

அரியானாவில் குரே ராம் என்ற 60 வயது ஆசிரியர் நீம்கா என்ற அரசு பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். அவர் ஓய்வு பெறும் நாளன்று ஹெலிகாப்டரில் வர வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லாத அவரது குடும்பத்தினர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர். வெறும் இரண்டே கிலோ மீட்டர் தூரம் உள்ளContinue reading "ஓய்வுபெரும் நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்"

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அரசு பணியில் இடைக்கால அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய துறைகளின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். ரயில்வே மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளில் மாதம் ரூ.35,000 ஊதியத்தில், ஓய்வுContinue reading "ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி"

சென்னை பல்கலை தொலைநிலை படிப்பு விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர்வதற்கான கடைசி தேதி ஆக.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்விப் பிரிவின்கீழ் இளங்கலை, முதுகலை படிப்புகள், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்விப் பிரிவில் சேர சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலை கல்விContinue reading "சென்னை பல்கலை தொலைநிலை படிப்பு விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்"

பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பிளஸ் 2 வகுப்புக்கு வழங்குவது போன்று மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாணவர்களின் ஒழுக்கம், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் தொடர் வகுப்பறை ஈடுபாடுகளின் தொடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடாக 10 மதிப்பெண்கள் வழங்குவது போன்று 10- ஆம் வகுப்புக்கும் அகமதிப்பெண்Continue reading "பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்"

புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பாடநூல்களில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து ஆசிரியர்களிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டு அதனை நீக்குவதற்கு மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் புதிதாக மாற்றி எழுதப்பட்டு நிகழ் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தப் பாடநூல்களில் பல்வேறு எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தப்Continue reading "புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு"

1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டு ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1,282 பணியிடங்களுக்கு ஒப்பளிப்புContinue reading "1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு"

அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்

அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள் அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974) *அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ளContinue reading "அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்"

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.

5% அகவிலைப் படி உயருமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது. தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது. அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கானContinue reading "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது."

நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

,👩‍🏫பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே கடந்த 50 ஆண்டுகளாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. 👩‍🏫பள்ளிக்கு செல்லும் வழியில் பலர் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். 👩‍🏫இந்த நிலையில் இன்று காலைContinue reading "நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்"

Design a site like this with WordPress.com
Get started