மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை

நம்மில் பலருக்கு மொபைல் போனில் நெட்டை பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்? சரி செய்வது எப்படி? இது குறித்த ஒரு சின்ன யோசனை. 2ஜிபி, 5ஜிபி என்று ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதாது! அதை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்! பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்?சரி செய்வது எப்படி? 100எம்பி அளவிலான டேட்டாவை ஒரு மாதம் முழுக்க ‘பொத்திப்பொத்தி’ பாதுகாத்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் மதிய உணவு இடைவேளை வருவதற்குContinueContinue reading “மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை”

வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு :TNPSC புதிய அறிவிப்பு

வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்கிறது. தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2688, தட்டச்சர், இளநிலை உதவியாளர்(பிணையம்)-104, வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1901, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-784 என மொத்தம்ContinueContinue reading “வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு :TNPSC புதிய அறிவிப்பு”

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உரிய திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு இன்னும் இந்தாண்டு நடைபெறவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டரை மாதமாகியும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்டத்திற்கு 60க்கும் மேல் வீதம் காலியாக இருப்பதால் மாணவ மாணவியர் கடும் அவதிப்பட ெதாடங்கியுள்ளனர். தமிழகத்தில் 11ம், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு பல பிரிவுகளுக்கு இதுவரை பாடம் எடுக்கப்படாததால் மாணவ மாணவியரும், பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும்ContinueContinue reading “அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்”

அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்கContinueContinue reading “அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு”

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சேகர் கூறினார். அவர் கூறியதாவது:மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி கொள்கையால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் இருக்காது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரியில் ஜாக்டோ – ஜியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அரசு அலுவலர், ஆசிரியர்கள் என 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின்ContinueContinue reading “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்”

பள்ளிகளில் “தூய்மை நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரல்” செப்டம்பர் 1 முதல் 15 வரை பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பு

Click here pdf file

ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..திங்கள் முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்

கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விதிகளை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார். பள்ளி கல்வி துறை அறிவிப்பின் பேரில் இருசக்கர வாகனம் ஓட்டி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அமல் படுத்தப்பட்டுள்ளது . இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பெருகிவரும் சாலைContinueContinue reading “ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..திங்கள் முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்”

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர். *தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில்* *1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு,* *2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு,* *3.கற்றல் விளைவுகள் பதிவேடு,* *4.பாடத்திட்டம்,* *5.மெல்ல கற்போர்ContinueContinue reading “ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு”

பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

திருக்குறள் எண்ணிக்கை அடிப்படையில் 1330 மரக்கன்றுகளை நட்டு அசத்திய கிராம இளைஞர்கள்

திருக்குறள் எண்ணிக்கை அடிப்படையில் செய்யாறு அருகே 1330 மரக்கன்றுகளை இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ‘நீர்இன்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்பது திருக்குறளில் திருவள்ளுவரின் வாக்காகும். மழை இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ இயலாது. அந்த மழைக்கு ஆதாரம் மரங்கள் என்பதால் மரங்களை வளர்க்கும் எண்ணம் மாணவர்கள் மனதில் பதியவேண்டும் என்பதற்காக செய்யாறு அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் ஏனாதவாடி கிராமத்தில் 73வது சுதந்திர தின விழாContinueContinue reading “திருக்குறள் எண்ணிக்கை அடிப்படையில் 1330 மரக்கன்றுகளை நட்டு அசத்திய கிராம இளைஞர்கள்”

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே! அங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது! தொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே. நம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால்ContinueContinue reading “தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!”

புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!

வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருதால் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 2019 முதல் 2022 வரையிலானContinueContinue reading “புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!”

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு போன்றவற்றை அணியக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு நிறங்களில் கயிறுகள், ரப்பர் வளையங்கள், உலோகத்தால் ஆன வளையங்கள் அணிந்து வருகின்றனர். இது மாணவர்கள் இடையே சாதி வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்று கடந்த 2018ம் ஆண்டைய பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசுக்குContinueContinue reading “பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்”

டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக்ContinueContinue reading “டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்”

ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியம் பெறுவதற்கான இணையவழி ஒரு பக்க விண்ணப் பம், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கான தனி இணையவழி மனு பரிசீலனை முகப்பு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 29 லட்சத்து 50 ஆயி ரம் பயனாளிகள் மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக பெறுகின் றனர். தற்போதுள்ள நடைமுறை யில் ஓய்வூதியம் கோரி மனுக் களை சமர்ப்பிக்க மனுதாரர்கள் வட்டாட்சியர், வருவாய் கோட் டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லContinueContinue reading “ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்”

பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு

அக மதிப்பீட்டு மதிப்பெண் விதிகளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, பள்ளிகளுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடங்களுக்கான கருத்தியல் தேர்வுடன், அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் வருகை பதிவு, கள பயணம், செயல் திட்டம், அக மதிப்பீட்டு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனஇதற்காக, பல்வேறு விதிகள்ContinueContinue reading “பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு”

44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய சமுதாயத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பள்ளி மாணவ பருவத்திலேயே அவர்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் நிலவுவதுடன், பள்ளி வளாகங்களிலேயே வன்முறை சம்பவங்கள் மாணவர்களால் அரங்கேற்றப்படுகின்றன. ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை என பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களை சமூக கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும், சட்டத்தை மதித்தும்,ContinueContinue reading “44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை”

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர். இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது இது இப்படி இருக்க ….. மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி போராடாத ஆசிரியContinueContinue reading “மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு”

மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை

அரசுப்பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ”அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றி வருவது வேதனையளிக்கின்றது. படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்த முடியும். கண்களைப் பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக இது உள்ளது. ஒரு மாணவர் கூட இல்லையென்று அரசுப் பள்ளிகளை மூடுவது ஒருபுறம் இருக்க,ContinueContinue reading “மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசுப்பள்ளியை மூடுவதா?- ஆசிரியர் சங்கம் வேதனை”

Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வுContinueContinue reading “Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!”

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வைContinueContinue reading “பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது”

DSE – 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

💲🔴💲ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.* *💲🔴💲இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ”மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறை பல்வேறு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி நலனையும் பாதிக்கும்.ContinueContinue reading “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்”

Design a site like this with WordPress.com
Get started