DGE – தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.

பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே ( பழைய)  பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம். 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு என தேர்வுத்துறை அறிவிப்பு. JOIN TELEGRAM GROUP LINK

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் 

அரசுப்பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டுவைத்தார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், 280 கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மற்றொரு திருமண மண்டபத்தில் நடைபெற்றContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் “

இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்

சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தபட இருந்தது. சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வுContinueContinue reading “இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்”

பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து

தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்,கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்றContinueContinue reading “பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து”

எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு

எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 900 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கான மாத உதவித் தொகையையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2,400 ஐஐடி மாணவர்கள், தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர், முதுகலைப் பட்டம் பயின்று கொண்டிருந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது. ஐஐடிக்களில் இடைநிற்றலைத் தவிர்க்கவும், எம்.டெக் கல்வி அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3ContinueContinue reading “எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு”

அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு

எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.. அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்குContinueContinue reading “அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு”

BIG FLASH:-ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு -அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை என ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தகுதி இல்லாத நபருக்கு ஆசிரியர் வேலை-DEO – உட்பட 7 பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு 

வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது

5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது* *இதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது* *இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது* *இந்த அரசாணை,ContinueContinue reading “5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?”

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு(“டைரி’) வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், நினைவாற்றலையும் வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதContinueContinue reading “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்”

DSE – தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி – 01.01.2018 ஆம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவி உயர்வு மூலம் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். Click here-HSS HM REG ORDER

ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள்ContinueContinue reading “ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்”

MBC இன மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க கடைபிடிக்கப்படும் நடைமுறையை, SC இன மாணவியருக்கும் கடைபிடிக்க, தற்போது உள்ள விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் பதில்!

முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு

புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்று முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக மூடப்பட்டதால் 380 மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காலாப்பட்டுவில் செயல்பட்ட அமலா தனியார் மேல்நிலை பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாகவும் மற்ற தகவல்களுக்கு கல்வித்துறையை அணுகுமாறும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காலாப்பட்டு காவல்நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார்ContinueContinue reading “முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு”

பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாடநூல்களை காலாண்டு விடுமுறைக்குப் பின் முதல் நாளில் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் நோட்டுப் புத்தகங்களும் இரண்டாம் பருவ பாடநூல்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குContinueContinue reading “பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்”

FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்கள் இதனை tnteu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தமிழகத்த்தில் ஆசிரியர் கல்விக்கான பி.எட் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் நேரடியாக TNTEU B.Sc B.Ed முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும். அல்லது பின்வரும்ContinueContinue reading “FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!”

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919ContinueContinue reading “உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது”

Design a site like this with WordPress.com
Get started