அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Click here join TELEGRAM GROUP LINK
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார்.
அப்போது, அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அதன்பின்னர் பேசிய அமைச்சர் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.
