பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மேசை, அலமாரி சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்தில் இருந்து மாணவர்கள் உயிர் தப்பினர். குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை, பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லால் ஆன அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால்Continue reading "பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மேசை, அலமாரி சேதம்"

NMMS Online Application Patrol Open 2019-20

மேற்காணும் இணையம் வழியே தற்போது NMMS விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் Step 1:Link Copy செய்து BROWSERஇல் search செய்யவும். Step2:User Name: YOUR SCHOOL DISE CODE PASSWORD: 999999 Step 3: click NOMINAL ROLL REGISTRATION CLICK HERE APPLY NMMS

Pre metric scholarship has been extended upto 31october 2019

சிறுபான்மைமாணவர்களுக்கான கல்விஉதவித் தொகையினைபெற புதிதாகவிண்ணப்பிக்க மற்றும்புதுப்பிக்க வழங்கப்பட்டதேதி நாளையுடன் 15.10.1019முடிவடைய உள்ள நிலையில்மீண்டும் 31.10.1019 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.Pre metric scholarship has been extended upto 31october 2019

இன்று அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி- பள்ளி கல்வித்துறை உத்தரவு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வரும் 14, 15ஆம் தேதிகளில் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது இந்த அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, கரூரில் வரும் அக்டோபர் 31, நவம்பர் 1 , 2ஆம் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான கண்காட்சியில் , பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் ?

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்வதாகக் கூறி ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகாசியில் உள்ள சிறப்புப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒரு பணியிடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், 35 லட்சத்தை மாற்றுத் திறனாளி ஆணையரக அதிகாரி ரஜினிகாந்த் என்பவரது அறிவுரைப்படி அவரது சென்னை வீட்டில் கொடுத்ததாகவும் கடந்தContinue reading "சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் ?"

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில், ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.  இந்நிலையில், 7வது ஊதியக்குழுContinue reading "பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்"

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகம்&Remedial Teaching Guide

Tamil Slow Learners Guide For Primary-Click here download Remedial Teaching Guide 2019 - Primary And Upper Primary - Tamil-Download Here  Remedial Teaching Guide 2019 - Primary And Upper Primary - English-DOWNLOAD HERE Remedial Teaching Guide 2019 - Primary And Upper Primary - Maths-DOWNLOAD HERE  Click here JOIN TELEGRAM group

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பயிற்சி நாட்களை EMIS யில் பதிவு செய்வது எப்படி?

Click here see this video தயாரிப்பு OUR THANKS TOஇரா.கோபிநாத்இடைநிலை ஆசிரியர்ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்கடம்பத்தூர் ஒன்றியம்திருவள்ளூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- 2019-2020நிதியாண்டு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு

*மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.* *ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019 - 20ம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகை ( School Grant ) - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு*➖➖➖➖➖➖➖➖➖➖➖*பள்ளி மானியத்தினைக் கீழ்க்காணும் இனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.* *1⃣.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 % தொகை SWACHHTA ACTION PLAN 2019-20 (SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.*Continue reading "ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- 2019-2020நிதியாண்டு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு"

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)

விழுப்புரம்,பெரம்பலூர்மற்றும் ஈரோடு மாவட்டங்களில்இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. ஈரோடு மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க ஈரோடு மாவட்டம்  அந்தியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. கீழ்க்கண்ட பாடங்களுக்குஆசிரியர்கள் தேவை. ✒Botany.✒English.✒Maths.✒Physics.✒Chemistry.✒Zoology.✒Physical Education.✒Social Science. விண்ணப்பிக்ககடைசிநாள் : 15/10/2019. Mangalam Hr.Sec.School,Anthyur. Erode - Dt. Mobile : 90952 10001.Tel: 04256-262344, 261571. விழுப்புரம் மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்டம்  களமருதூரில் இயங்கி வரும்Continue reading "3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)"

10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய கடலோர காவல் படை மேலாண்மை : மத்திய அரசு பணி : நேவிக் பிரிவில் சமையலர், மேற்பார்வையாளர் வயது வரம்பு : 1 ஏப்ரல் 2020 தேதியின்படி, 18Continue reading "10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு"

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பட்டபடிப்பு பிரிவில் - 250 காலிப்பணியிடங்கள்டிப்ளமோ பிரிவில் - 250 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: Diploma / B.E. Degree பயிற்சி காலம் : 1 வருடம் ஊதியம் : பொறியியல் பிரிவு - மாதம் ரூ. 4,984/-டிப்ளமோ பிரிவு - மாதம் ரூ. 3,542/- வயது வரம்பு:As perContinue reading "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி"

தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள 27 கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 27  பணியிடம்: தஞ்சாவூர் Click here join telegram group link பணி: கணினி இயக்குனர் - 01 பணி: வடிவமைப்பாளர் - 01 சம்பளம்: மாதம் ரூ.4,900Continue reading "தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்"

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தினர்.  அதில் தர்மபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், டெங்குContinue reading "பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு"

மத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்

மத்திய அரசின் உயர் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர்ஜோதி வெங்கடேஷ்வரன் வெளியிட்ட செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 2019 மார்ச் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களும், ஏற்கெனவே 2015, 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகை பெற்று வருபவர்களிடமிருந்துContinue reading "மத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்"

நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம்

நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடங்கப்பட்டது இன்று *12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் மற்றும் திருப்பத்தூர் CKS மணி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டுContinue reading "நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம்"

வகுப்பறைக்குள் சினிமா பாணியில் நடமாட்டம் ஒழுக்க விதிகளை மீறும் பள்ளி மாணவர்கள்

வகுப்பறைகளில் சினிமா பாணியில் நுழையும் மாணவர்களின் நடை, உடை, தோற்ற பாவனைகள் தமிழகத்தின் எதிர்காலத்தை எங்கே அழைத்து செல்கிறது என்ற கேள்வியே சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது . தமிழகத்தில் 23,928 அரசு ஆரம்பப்பள்ளிகளும், 7,260 நடுநிலைப் பள்ளிகளும், 3,044 உயர்நிலைப்பள்ளிகளும், 2,727 மேனிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில், 64,855 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், 50,508 நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 27,891 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், 73,616 மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில் 56,55,628 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுContinue reading "வகுப்பறைக்குள் சினிமா பாணியில் நடமாட்டம் ஒழுக்க விதிகளை மீறும் பள்ளி மாணவர்கள்"

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

காளையார்கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் அரசு துவக்கப்பள்ளியில் கழிப்பறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட இரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகின்றனர். இங்கு ஒன்று முதல் 5 வகுப்பு வரை 54 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியைக்கும், மற்றொரு ஆசிரியைக்கும் ஈகோ பிரச்னையால் தகராறு ஏற்படுகிறது. தலைமை ஆசிரியை அடிக்கடி விடுப்பில் சென்று விடுகிறார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் ஆசிரியைகளுக்கான கழிப்பறையை சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.Continue reading "பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்"

காலாண்டுத்தேர்வு மதிப்பெண் ஆய்வில் ஆசிரியர்கள் தீவிரம்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காலாண்டு மதிப்பெண்களை, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து மதிப்பீடுகின்றனர். அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை, அதன் அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்கும் வகையில் தற்போது நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும், 14 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பொறுப்பாக நியமித்துள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஒரு மேல்நிலை அல்லது உயர்நிலைப்பள்ளிக்கு ஒருவர் என்ற வகையில், அந்த பள்ளிContinue reading "காலாண்டுத்தேர்வு மதிப்பெண் ஆய்வில் ஆசிரியர்கள் தீவிரம்"

தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளாளர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் கீழ் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும்Continue reading "தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை"

Design a site like this with WordPress.com
Get started