பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மேசை, அலமாரி சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்தில் இருந்து மாணவர்கள் உயிர் தப்பினர். குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை, பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லால் ஆன அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால்ContinueContinue reading “பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மேசை, அலமாரி சேதம்”

NMMS Online Application Patrol Open 2019-20

மேற்காணும் இணையம் வழியே தற்போது NMMS விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் Step 1:Link Copy செய்து BROWSERஇல் search செய்யவும். Step2:User Name: YOUR SCHOOL DISE CODE PASSWORD: 999999 Step 3: click NOMINAL ROLL REGISTRATION CLICK HERE APPLY NMMS

Pre metric scholarship has been extended upto 31october 2019

சிறுபான்மைமாணவர்களுக்கான கல்விஉதவித் தொகையினைபெற புதிதாகவிண்ணப்பிக்க மற்றும்புதுப்பிக்க வழங்கப்பட்டதேதி நாளையுடன் 15.10.1019முடிவடைய உள்ள நிலையில்மீண்டும் 31.10.1019 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.Pre metric scholarship has been extended upto 31october 2019

இன்று அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி- பள்ளி கல்வித்துறை உத்தரவு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வரும் 14, 15ஆம் தேதிகளில் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது இந்த அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, கரூரில் வரும் அக்டோபர் 31, நவம்பர் 1 , 2ஆம் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான கண்காட்சியில் , பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் ?

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்வதாகக் கூறி ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகாசியில் உள்ள சிறப்புப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒரு பணியிடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், 35 லட்சத்தை மாற்றுத் திறனாளி ஆணையரக அதிகாரி ரஜினிகாந்த் என்பவரது அறிவுரைப்படி அவரது சென்னை வீட்டில் கொடுத்ததாகவும் கடந்தContinueContinue reading “சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் ?”

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில், ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.  இந்நிலையில், 7வது ஊதியக்குழுContinueContinue reading “பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பகுதி நேர ஆசிரியர்கள்”

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- 2019-2020நிதியாண்டு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு

*மானியத் தொகை – செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.* *ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2019 – 20ம் நிதியாண்டு – தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு – பள்ளி மானியத் தொகை ( School Grant ) – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு*➖➖➖➖➖➖➖➖➖➖➖*பள்ளி மானியத்தினைக் கீழ்க்காணும் இனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.* *1⃣.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 % தொகை SWACHHTA ACTION PLAN 2019-20 (SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.*ContinueContinue reading “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- 2019-2020நிதியாண்டு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு”

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தினர்.  அதில் தர்மபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், டெங்குContinueContinue reading “பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு”

மத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்

மத்திய அரசின் உயர் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர்ஜோதி வெங்கடேஷ்வரன் வெளியிட்ட செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 2019 மார்ச் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களும், ஏற்கெனவே 2015, 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகை பெற்று வருபவர்களிடமிருந்துContinueContinue reading “மத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்”

நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம்

நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடங்கப்பட்டது இன்று *12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் மற்றும் திருப்பத்தூர் CKS மணி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டுContinueContinue reading “நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம்”

வகுப்பறைக்குள் சினிமா பாணியில் நடமாட்டம் ஒழுக்க விதிகளை மீறும் பள்ளி மாணவர்கள்

வகுப்பறைகளில் சினிமா பாணியில் நுழையும் மாணவர்களின் நடை, உடை, தோற்ற பாவனைகள் தமிழகத்தின் எதிர்காலத்தை எங்கே அழைத்து செல்கிறது என்ற கேள்வியே சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது . தமிழகத்தில் 23,928 அரசு ஆரம்பப்பள்ளிகளும், 7,260 நடுநிலைப் பள்ளிகளும், 3,044 உயர்நிலைப்பள்ளிகளும், 2,727 மேனிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில், 64,855 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், 50,508 நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 27,891 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், 73,616 மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில் 56,55,628 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுContinueContinue reading “வகுப்பறைக்குள் சினிமா பாணியில் நடமாட்டம் ஒழுக்க விதிகளை மீறும் பள்ளி மாணவர்கள்”

காலாண்டுத்தேர்வு மதிப்பெண் ஆய்வில் ஆசிரியர்கள் தீவிரம்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காலாண்டு மதிப்பெண்களை, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து மதிப்பீடுகின்றனர். அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை, அதன் அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்கும் வகையில் தற்போது நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும், 14 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பொறுப்பாக நியமித்துள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஒரு மேல்நிலை அல்லது உயர்நிலைப்பள்ளிக்கு ஒருவர் என்ற வகையில், அந்த பள்ளிContinueContinue reading “காலாண்டுத்தேர்வு மதிப்பெண் ஆய்வில் ஆசிரியர்கள் தீவிரம்”

தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளாளர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் கீழ் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும்ContinueContinue reading “தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை”

வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி

பொது மாறுதல் கலந்தாய்வில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றாவிட்டாலும் கலந்து கொள்ளலாம், என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் மற்ற ஆசிரியர் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க, தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்றாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் சில ஆசிரியர்கள்ContinueContinue reading “வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி”

புத்தாக்கப் பயிற்சி எப்போது வழங்கப்படும்? ‘டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியா்கள் காத்திருப்பு

தமிழகத்தில் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் 1,450 பள்ளி ஆசிரியா்கள், தேர்விலிருந்து விலக்குப் பெறும் வகையில் புத்தாக்கப் பயிற்சியை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா். இந்தச் சட்டத்துக்கு முதலில் எதிா்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, பின்னா் சட்டத்தை ஏற்றுக் கொண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு இது தொடா்பான அரசாணையை வெளியிட்டது. ஆனால் இதில் டெட் தேர்வுக்கான அறிவிப்பு குறித்த தகவல் இல்லை. இந்த அறிவிப்புக்கு முன்பாக, ஆசிரியா் பணியில் சோந்தவா்கள் தேர்வில் விலக்கு கோரி நீதிமன்றத்துக்குச் சென்றனா்.ContinueContinue reading “புத்தாக்கப் பயிற்சி எப்போது வழங்கப்படும்? ‘டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியா்கள் காத்திருப்பு”

பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்

தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.* 🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டுContinueContinue reading “பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்”

அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம்

மத்திய அரசின் என்சிஇஆா்டி அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அக்.14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், அக்டோபா் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவும் (இளைஞா் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சி பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியா்கள், மாணவா்கள், அறிவியல் ஆா்வலா்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இவற்றைContinueContinue reading “அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம்”

FLASH NEWS :- பொது மாறுதல் கலந்தாய்வு – 2019-20 New Norms Published

பள்ளிக் கல்வி – பொது மாறுதல் கலந்தாய்வு – 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது!;சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் – வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

CLICK HERE COURT ORDER COPY

Design a site like this with WordPress.com
Get started