பி.எப்., வட்டி சதவீதம் உயர்வு

இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, 2018 -19க்கான வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017 – -18 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த, 8.55 சதவீத வட்டி, தற்போது, 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும், கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், 0.10 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும்.

இதனால், 6 கோடி வாடிக்கையாளர்களின் கணக்கில், 54 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி வரவு வைக்கப்படும்.

Design a site like this with WordPress.com
Get started