பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY

ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL – 177 நாட்கள்) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது. அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது.அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் விடுபட்ட பதிவினை பதிவு செய்து பணப்பலன்களைப் பெற்றுத் தர அதிகாரம் உள்ளதா? இல்லை எனில் இந்த சிக்கல் தீர்வு காணும் விதமாக எந்த அதிகாரியை அணுக வேண்டும்? CM CELLContinueContinue reading “பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY”

முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இணை துறை அலுவலர்கள்- ஒன்றியத்தில் பள்ளி பார்வை–மீளாய்வு கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து!! – பார்வை அலுவலர்கள் விவரம்!!

பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்

தேசிய கல்வி உதவித் தொகை பெற்று தர பெரும்பாலான பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7 ஆயிரம் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் வைக்கப்படுகிறது. அதில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுContinueContinue reading “பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்”

புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன

புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் மாதம் 11- ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம்ContinueContinue reading “புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன”

இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?

பள்ளிக்கல்வி துறை மூலம் நடைபெற இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் குளறுபடிகள் நடந்ததால் இடைநிலை ஆசிரியர் பணிநியமன ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடத்தப்படும் என அறிவித்தது. நீதிமன்ற உத்தரவால் மூன்றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம் பணிபுரிந்தால் போதும் எனContinueContinue reading “இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?”

Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், கணினி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பாணையில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 23, 27ContinueContinue reading “Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்”

🅱️REAKING NEWSமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் டிச.8ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.18 எனவும் அறிவிப்பு.

பணிநியமன ஆணை கோரி சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பணிநியமன ஆணை கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம். சென்னை டிபிஐ வளாகத்தில் TRP இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட்டியை குறைத்தது SBI.. இனி வீட்டுக் கடன் EMI குறையும்! நாளை முதல் அமல்!

நாட்டின் பொதுத்துறை வங்கியும், முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் இனி வீட்டுக் கடன், வாகனக் கடன் இ.எம்.ஐ சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவிகிதத்திலிருந்து, 8.10 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் களுக்கான வட்டி விகிதத்தை, ரெபோ விகிதத்தை 5.75 சதவிகிதத்திலிருந்து, 35 புள்ளிகள்ContinueContinue reading “வட்டியை குறைத்தது SBI.. இனி வீட்டுக் கடன் EMI குறையும்! நாளை முதல் அமல்!”

நவ.11-ம் தேதி தேசிய கல்வி தினம்: புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு, தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை’ கடந்த 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே, தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலContinueContinue reading “நவ.11-ம் தேதி தேசிய கல்வி தினம்: புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம்”

🅱️கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 2400 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவிற்கு அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு

தமிழக பாட திட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாடமும், முப்பருவ தேர்வும் அமலில் உள்ளன. அதேநேரத்தில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், இந்த மாதம் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள், அரசு பள்ளிகளில், வரும், 12ம் தேதிContinueContinue reading “24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு”

KALVI 40 – MOBILE APP FOR STUDENTS

click here download app ஆசிரியர்கள் மற்றும்மாணவர்களிடமிருந்து வந்தவிமர்சனங்களைஅடிப்படையில், புதியஎளிமையான பதிப்பைப்புதுப்பிக்க அல்லது நிறுவ மற்றும் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்குமட்டுமே, பயிற்சி ,தேர்வுஎடுக்கவும் உடனடியாகதிருத்தம் செய்யும் வசதியும்கல்வி40ல் உள்ளது.

EMIS வலைதளத்தில் Term Table எவ்வாறு, பதிவேற்றம் செய்வது

Term Time table பதிவு செய்தாலும் வாரம் ஒரு முறை copy time table option க்கு சென்று option -1, or option-2 பயன்படுத்தி assigned time table கொடுக்க வேண்டும்.👇👇👇👇 click see this video

ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதிகள்- இயக்குநர் விளக்கம்

ஆசிரியர்களுக்கானஅடிப்படை தகுதிகள், என்.எல்.சி., இயக்குநர்விக்ரமன் விளக்கம் தினமும் புதிதாக கற்கவேண்டும் என்ற ஆவலும்,மாணவர்களை அன்புடன்நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும்என, என்.எல்.சி., இயக்குனர்பேசினார். என்.எல்.சி., இந்தியாநிறுவன கல்வித்துறையின்சார்பில் ஆசிரியர் தினவிழாகொண்டாடப்பட்டது.என்.எல்.சி.,முதன்மைபொதுமேலாளர் மோகன்தலைமை தாங்கினார்.கல்வித்துறை செயலர்விநாயகமூர்த்தி முன்னிலைவகித்தார். பெண்கள் பள்ளிதலைமை ஆசிரியைசெந்தாமரை வரவேற்றார். என்.எல்.சி., மனிதவளத்துறைஇயக்குநர் விக்ரமன்,அந்நிறுவனத்தால்அறிவிக்கப்பட்ட 20நல்லாசிரியருக்கு விருதுவழங்கினார்.அப்போது அவர்பேசுகையில், ‘தினமும்புதிதாக கற்க வேண்டும் என்றஆவலும், மாணவர்களைஅன்புடன் நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும். புத்தகத்தை மட்டும் படிக்காது,பாடம் தொடர்பாக இதரஊடகங்களையும் படிக்கதூண்டுதல், புத்தகங்களின்பக்கங்களைContinueContinue reading “ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதிகள்- இயக்குநர் விளக்கம்”

பயோ மெட்ரிக் வருகைப் பதிவு : சில முக்கிய தகவல்கள்:

ஆசிரியரின் தனிப்பட்டபயனர் உட்புகுதல் வழியாக,பயோ மெட்ரிக் வருகைப்பதிவில் என்னென்னவசதிகள் மேற்கொள்ளமுடியும்? அல்லதுதிருத்தங்கள் செய்யமுடியும்? What can be done in the Employee Corner: Update the demographic information submitted on BAS portal. Set reminder to receive SMS alert for marking opening & closing attendance. View Employee Attendance Register. Add Full/Half day Leave records. (requires verification by nodal officer to be displayedContinueContinue reading “பயோ மெட்ரிக் வருகைப் பதிவு : சில முக்கிய தகவல்கள்:”

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற செய்யவேண்டியவை:அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர் என்றும்ContinueContinue reading “ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற செய்யவேண்டியவை:அமைச்சர் செங்கோட்டையன்”

2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை

மாணவர்கள்ஒரு நல்ல ஆசான் நினைத்தால் களிமண்ணையும் உயிரூட்டமுள்ள அழகிய பொக்கிஷமாக வடிக்க முடியும். இவர்களை கவுரவிக்கும் விதமாக, தமிழக அளவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆண்டுதோறும் வழங்குகிறது. இந்தாண்டு, திருப்பூரில் இருந்து விருது வாங்கியவர்களில், பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா,முக்கியமானவர். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் செய்த சாதனை மகத்தானது.அதை அவரிடமே கேட்போம்…கடந்த, 1997ல் பெருமாநல்லுார் அருகே தொரவலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர் பணியில்ContinueContinue reading “2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை”

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களால், நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என கவலை தெரிவித்தார். ஆதலால் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செங்கோட்டையன்ContinueContinue reading “90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்”

தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தை பாருங்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவில் நலத்திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளார். கோழியாலம் அரசு ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் விக்னேஷ்வரன் என்பவருக்கு ஞாயிற்றுக்கிழமை காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விக்னேஷ்வரனுக்குத் தோன்றியுள்ளது. இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக்கானContinueContinue reading “தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தை பாருங்கள்..”

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு

சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.விழிப்புணர்வு பேரணி: திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.’ தூய்மை பாரதம்’ திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ மாணவியர், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில், பேரணி செல்லும்போது, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த, பள்ளியின்,ContinueContinue reading “சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்; ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு”

பள்ளி வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்ய வேண்டும்: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் ஆசிரியர் பயிற்றுநர்களின் வரையறுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் பல்வேறு விதிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் ஆசிரியர்களின் பணிகள் தொடர்பாக கூறியிருப்பதாவது:*இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன்படி பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளை பள்ளி வரைபட பயிற்சி மற்றும் புவியியல் தகவல் முறைமை மூலம் கண்டறிய வேண்டும். இதில் தேவையின் அடிப்படையில் புதிய தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம்ContinueContinue reading “பள்ளி வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்ய வேண்டும்: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உத்தரவு”

சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை – உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை

சி.பி.எஸ்.இ., 6ஆம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்வில் சரியான விடையை தேர்வு செய் என்ற பகுதியில், இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில், தலித்துகள் யார்” என்கிற கேள்விக்கு, தீண்டத்தகாதவர்” என்ற பதிலும், இஸ்லாமியர்களின் வழக்கமான குணம்” என்ன ?என்பதற்கு, பெண் பிள்ளைகளை, பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்” என்ற பதிலும் தரப்பட்டுள்ளது. இந்த இரு கேள்விகள் மற்றும் பதில்கள், சர்ச்சையைContinueContinue reading “சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை – உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை”

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ம் கல்வி ஆண்டில் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர். அப்போதுContinueContinue reading “பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”

Design a site like this with WordPress.com
Get started